ETV Bharat / state

வேங்கை வயல் DNA சோதனை: மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு - petition against SC ST court order as DNA test

வேங்கைவயல் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்களேயே குற்றவாளிகளாக மாற்ற முயற்சிப்பதாகவும், குற்றம் உறுதி செய்யப்படாத தனி நபர்களை DNA பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவதாகவும் கூறி, புதுக்கோட்டை எஸ்சி அல்லது எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக, அம்மாவட்ட ஆட்சியர், எஸ்பி, சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 28, 2023, 11:00 PM IST

மதுரை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் DNA பரிசோதனை செய்வது தொடர்பாக, தன்னை DNA பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என புதுக்கோட்டை SC/ST வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி வேங்கை வயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த மனுவின் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், வேங்கை வயல் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'வேங்கை வயல் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். தற்போது கள மேலாளராக பணியாற்றி வருகிறேன். நான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் உள்ளிட்ட கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விதமான தீண்டாமைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி துணை காவல் ஆய்வாளர், தவறு செய்தவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடாமல், தொடர்ச்சியாக பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார். விசாரணை என்னும் பெயரில் தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக என்னையும், இதில் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தனிநபரின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது. வேங்கை வயலில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் என் மீது குற்றம் சுமத்தும் நோக்கில் தொடர்ச்சியாக தொல்லை செய்து மிரட்டி வருகிறார்.

குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரி எப்போது எடுக்கப்பட்டது, எவ்வளவு எடுக்கப்பட்டது, அதன் நிறம் உள்ளிட்ட விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. DNA பரிசோதனைக்கு போதுமான அளவு மாதிரி கிடைத்ததா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக அழைக்கப்பட்ட 11 பேரில் 9 நபர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இது பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே, குற்றவாளிகளாக்க நடைபெறும் முயற்சியை உறுதிப்படுத்துகிறது. குற்றம் உறுதி செய்யப்படாமல் தனி நபர்களை DNA பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது, தனி மனித உரிமைக்கு எதிரானது. மாதிரி சேகரிக்கப்பட்டது, DNA பரிசோதனை செய்வது போன்றவை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை.

ஆகவே DNA பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை எஸ்.சி/ எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதோடு, என்னை DNA பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஏப்.28) விசாரித்த நீதிபதி இளங்கோவன், வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேங்கைவயல் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன்1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: வேங்கைவயல் சம்பவம் - 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.