இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்களை அந்தந்த மாநில அரசுகள் தனிமைப்படுத்தி கண்காணித்துவருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து மதுரை வந்த ஏழு பேர் உள்பட 9 பேருக்கு நேற்று (மே 14) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மதுரையிலுள்ள அரசு ராசாசி மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் 123 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நேற்றைய தினம் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 132ஆகவும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47ஆகவும் உயர்ந்துள்ளது.
கரோனா பரிசோதனைக்கு வரும் நோயாளிகளை தவிர அதிக நபர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் துறையும் மதுரை மாநகராட்சியும் மருத்துவமனையை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் திறக்க சனி ஞாயிறு தடை