ETV Bharat / state

"இந்துக்களின் வழிபாட்டிடத்தை கல்குவாரியாக்க விடமாட்டோம்" - பொங்கியெழும் இஸ்லாமியர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:51 PM IST

sekkipatti granite quarry issue: 'காலங்காலமாக எங்கள் கிராமத்திலுள்ள இந்து மக்கள் வழிபடும் முருகன் கோவில் அமைந்துள்ள மலையை கல்குவாரியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மலையைக் காக்கப் போராடும் சேக்கிப்பட்டி மக்களுடன் கைகோர்த்து இஸ்லாமியர்களும் தொடர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

sekkipatti granite quarry issue
இந்துக்களின் வழிபாட்டிடத்தை கல்குவாரியாக்க விடமாட்டோம் - பொங்கியெழும் இஸ்லாமியர்கள்
sekkipatti granite quarry issue

மதுரை: மேலூர் வட்டத்தில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய கிராமங்களில் உள்ள மலைகளை கிரானைட் குவாரிகளுக்காக 20 ஆண்டு குத்தகைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு மதுரையில் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிரானைட் குவாரிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, சேக்கிப்பட்டி கிராம மக்கள் கடந்த திங்கள்கிழமை (அக் 23) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சேக்கிப்பட்டி கிராமத்திலுள்ள முத்தாலம்மன் கோவில் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்தை அக்டோபர் 26-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். நாள்தோறும் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பிறகு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுகையில், "எங்கள் ஊரிலுள்ள பனிமலைக்குற்றைத்தான் மாவட்ட நிர்வாகம் கிரானைட் குவாரிக்காக ஒப்பந்தம் அறிவிக்க உள்ளது. இந்த மலையை இரண்டு பகுதியாகப் பிரித்து 17 ஏக்கரை 20 ஆண்டு குத்தகைக்கு விட முடிவெடுத்துள்ளது.

அக்டோபர் 31-ஆம் தேதி பொது ஏலம் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட மலையைச் சுற்றி ஐந்து நீர்நிலைகள் உள்ளன. இதில் இரண்டு குடிநீருக்கானது. ஏலம் விடப்படுமானால் இப்பகுதி விவசாயம், குடிநீராதாரம் பாதிக்கப்படும். பெரியாறு உள்ளிட்ட எந்தவித கால்வாய்ப் பாசனமும் இல்லாத இந்தப் பகுதியில், குறிப்பிட்ட நீர்நிலைகள்தான் ஒரே ஆதாரம். இந்தப் பகுதி மக்களுக்கு இவைதான் ஒரே வாழ்வாதாரம். தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் வந்து எங்களிடம் பேசி உறுதியளித்து, கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், எங்கள் கிராமத்துப் பெண்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறிவிட்டனர். ஆகையால் போராட்டம் தொடரும்" என்றார்.

உள்ளூர் விவசாயி சாகுல் ஹமீது கூறுகையில், "எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாமல் குவாரி ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னர் குவாரியாக இந்த மலை இல்லாதபோது, தற்போது புதிதாகச் சேர்த்துள்ளார்கள். இந்தக் குவாரி செயல்பாட்டு வந்தால் எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் வழிபடும் முருகன் கோவில் அந்த மலையில்தான் அமைந்துள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், விராலிமலை, சுவாமிமலைகளையெல்லாம் குவாரிக்காக இவர்கள் கைவைப்பார்களா..? கிராம மக்கள் 400 ஆண்டு காலமாக அமைதியாக வழிபடும் எங்களது முருகன் கோவிலை மட்டும் குவாரியாக்குவதை ஏற்க முடியாது" என்றார்.

அலங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் கூறுகையில், "இங்கு இருக்கின்ற இந்த பாறைதான் எங்களுக்கான ஒரே வாழ்வாதாரம். இதன் அருகிலுள்ள நீர்நிலைகள்தான் குடிநீருக்கும், வெள்ளாமைக்கும் உதவியாக உள்ளது. இந்தப் பாறையை உடைத்தார்கள் என்றால் எங்களுக்கு பிழைப்பு இல்லை. இதற்குப் பிறகும் இவர்கள் உடைக்க முயன்றால், இந்த ஊரில் எங்களால் வாழ முடியாது. இந்த நீர்நிலைகள் அழிந்தால் குடிநீருக்காக சராசரியாக ஒன்றரை கி.மீ. தூரம் நாங்கள் செல்ல வேண்டும். அரசு மேற்கொள்வது மிகத் தவறான முடிவு. பாறையை வெட்டும்போது எழும் தூசி விழுந்தாலே இங்கு எந்த விவசாயமும் மேற்கொள்ள முடியாது" என்றார்.

சேக்கிப்பட்டியைச் சேர்ந்த ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் பக்ருதீன் அலி அகமது கூறுகையில், "கடந்த காலங்களில் மேலூர், ஒத்தக்கடை, திருமங்கலம் போன்ற பகுதிகளில் கிரானைட் குவாரிகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் சீரழிவுகளை மக்கள் நேரடியாக உணர்ந்தனர். கீழவளவு கிரானைட் குவாரியைச் சுற்றிலும் விவசாய மக்களின் பட்டா நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் எல்லாம் மறைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதியில் டெங்குக் காய்ச்சலால் ஒரே வாரத்தில் 52 பேர் இறந்தனர். கிரானைட் குவாரிகளுக்காக வெட்டப்பட்ட குழிகளில் தேங்கிய தண்ணீர்தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது. வெட்டப்பட்ட குழிகளைக் கூட விதிமுறைகளின் படி முறையாக மூடாமல் விட்டு விட்டுச் சென்றதால் ஏற்பட்ட விளைவு இது. 50 மீ வெட்டிக் கொள்ள அனுமதி அளித்தால், 500 மீட்டர் வரை வெட்டி கிரானைட் முதலாளிகள் முறைகேடு செய்தனர். கனிமவளங்களை வெட்டியெடுப்பது நமது உடலுறுப்புகளை வெட்டியெடுப்பதற்குச் சமம்" என்றார்.

சேக்கிப்பட்டி கிராம மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து குவாரிகளுக்கான ஏலத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது இதனை வரவேற்ற கிராம மக்கள் நிரந்தரமாக குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

சேக்கிப்பட்டி கிராம மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் செவி சாய்க்குமா? என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வாஷிங்டன் வரை சென்ற பாஜக பிரச்சாரம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.