ETV Bharat / state

ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்

author img

By

Published : Sep 16, 2021, 7:23 PM IST

தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை உறுப்பினர்  அஞ்சல் ஆய்வாளர் பணி  ஒன்றிய அரசு  அஞ்சல் ஆய்வாளர்  அஞ்சல் ஆய்வாளர் தேர்வு  சு வெங்கடேசன்  மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன்  postal department  Staff Selection Commission  madurai news  madurai latest news  postal staff  madurai mp  central government  mp s venkatesan  mp s venkatesan letter to central government
சு வெங்கடேசன்

மதுரை: தமிழ்நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு, மதுரை மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன் கடிதம் எழுதி வருகிறார்.

அந்த வகையில் ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு இன்று (செப். 16) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழுக்கு முக்கியத்துவம்

அக்கடிதத்தில் அவர், “அஞ்சல் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் (Staff Selection Commission) நடத்தும்போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்றுகூட சோதித்துப் பார்ப்பதில்லை.

இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள். அந்த பணியாளர்களும் தங்கள் பணியை திறம்பட ஆற்ற முடிவதில்லை. ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பவர்கள்.

தமிழ் அறிந்திருக்க வேண்டாமா?

கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அறிய வருகிறேன்.

அஞ்சல் அலுவலகங்களின் கதவை தட்டுபவர்களில் பெரும்பான்மையோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக்கான மக்களை இணைக்கிற அஞ்சல் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா.

எனவே அஞ்சல் ஊழியர் நியமன முறையில் தமிழ் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும். பள்ளி இறுதி தேர்வு/ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம்.

இக்கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது அஞ்சல் சேவையை மேம்படுத்தும். அதை நாடி வரும் மக்களுக்கும் பெரும் பயன் தரும். ஒன்றிய அரசு இக்கோரிக்கைக்கு செவிமடுக்குமென்று நம்புகிறேன்” என எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.