ETV Bharat / state

'3ஆவது அலையை எதிர்கொள்ள தயாரான தூங்க நகரம்'

கரோனா தொற்று மூன்றாம் அலை மதுரையை தாக்காத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 16, 2021, 10:14 PM IST

minister-moorthy-on-corona-third-wave
minister-moorthy-on-corona-third-wave

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்துடன் இணைந்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

3ஆம் அலை முன்னெச்சரிக்கை

இதன் பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "மூன்றாவது அலைக்குத் தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மூன்றாம் அலை மதுரையைப் பாதிக்காது.

நீட் விவகாரம்

நீட் விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாகச் சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்க முடியாத நிலையில் தற்போது மட்டும் குறைகூறுவது நியாயமா?

வணிகவரித் துறையைப் பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல வணிகர்களிடம் கருத்துகள் கேட்டபிறகு அவர்கள் தங்களது தொழிலை நேர்மையாகச் செய்வதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தரும். வணிக நல வாரியங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெளி மாநிலங்களுக்கு போலியாக ரசீது தயாரித்து அனுப்பக்கூடிய சரக்குகளைக் கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

பத்திரப்பதிவுத் துறையைச் சீர்படுத்துதல்

ஊழலின் மொத்த உருவமாகப் பத்திரப் பதிவுத் துறை இருந்துவந்த நிலையில் அது குறித்து இரண்டு மாதங்களில் நடவடிக்கைகள் எடுத்து சீர்ப்படுத்திவருகிறோம். பத்திரத் துறையில் அதிமுக ஆட்சியில் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் மூர்த்தி

காவல் நிலையம், கோயில் நிலங்கள் போலியாக அதிமுக ஆட்சியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசின் பத்திரப்பதிவு துறை அமைச்சர், மதுரை பக்கமே வரவில்லை" என்றார்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசா, மத்திய அரசா? குழம்பிய கே.என். நேரு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.