ETV Bharat / state

"எடப்பாடி பழனிசாமி 50% கூட தகுதியற்றவர்" - அமைச்சர் எ.வ. வேலு விமர்சனம் - பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ''முதலமைச்சர் ஸ்டாலினோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிசாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர்'' என விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் எ.வ வேலு விமர்சனம்
அமைச்சர் எ.வ வேலு விமர்சனம்
author img

By

Published : Jul 5, 2023, 6:23 PM IST

அமைச்சர் எ.வ. வேலு விமர்சனம்

மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கட்டுமானப் பணி மதுரையில் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த நூலகம் திறந்து வைக்கப்பட உள்ளது. அதன் இறுதிகட்டப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டடம் 132 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைக்கிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்த பின், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கலைஞர் நூலகப் பணிகள் வரும் 10ஆம் தேதிக்குள் முடிவடையும். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தை பயன்படுத்தியது காலையில் தான் தெரிய வந்துள்ளது. (பொதுக்கூட்டத்தில் உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை என எ.வ.வேலு பேசினார்). பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றக்கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்குப் பதிலாக, பிச்சை என தவறான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன். பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிசாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர். கருணாநிதியிடம் பயிற்சி பெற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களுக்கான முதலமைச்சர். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தானே வைக்கும். எங்களை பாராட்டவா போகிறார்கள்? திராவிடத்துக்குள் ஆன்மிகம் உள்ளது.

திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. மாமன்னன் படம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆத்திரத்தில் பேசி வருகிறார். மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதி சிறப்பாக நடித்துள்ளார். ஒட்டுமொத்த அருந்ததியர்களுக்கான படம் மாமன்னன்" எனப் பேசினார்.

''மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் நிதி செலவினம் ரூ.114 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.215 கோடியாக உயர்ந்துள்ளது. 132 கோடி ரூபாய் கட்டடப் பணிகளுக்கும், 60 கோடி ரூபாய் நூல்களுக்கும், 18 கோடி ரூபாய் மரச் சாமான்களுக்கும், 5 கோடி ரூபாய் கணினிகளுக்கும் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது’’ இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க அனுமதியுங்கள் - அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.