ETV Bharat / state

மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க இடைக்காலத் தடை - பின்னணி இதுதான்? - court news in tamil

மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 50 சதவீத இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்ப வேண்டும் என்ற தமிழ்நாடு அரசாணையை முறையாக செயல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழகத்தில் மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

author img

By

Published : Jul 14, 2023, 3:32 PM IST

மதுரை: மாவட்ட நூலகத்திலும் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 50 சதவீத இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்ப வேண்டும் என்ற தமிழ்நாடு அரசாணையை முறையாக செயல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழகத்தில் மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர், புவனேஸ்வரி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ''வீரபாண்டியில் உள்ள அரசு கிளை நூலகத்தில் நூலகராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன் என்றும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நூலகத்திலும் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 50 சதவீத இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வின் மூலமாக நிரப்ப வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கு நேரடியாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: திருப்புவனம் ஆதி கோரக்கநாதர் சுவாமி கோயில் முறைகேடு வழக்கு - அறநிலையத்துறைக்கு உத்தரவு!

மேலும், நூலகர்களை நூலக அலுவலர் பதவிகளுக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து, அவர்கள் ஓய்வு பெறும் வரை அந்தப் பதவியில் நீடிக்க செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளனர் என்றும், இதனால் தமிழக அரசின் அரசாணையை பின்பற்றி மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நிரப்ப வேண்டும் என்றும், அதுவரை இந்த பணியிடங்களுக்கு தற்காலிக அலுவலர்களை நியமிக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: தெருவோர கடைகளுக்கான வாடகை வசூல் செய்யும் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் சரமாரி கேள்வி

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில், தமிழகத்தில் மாவட்ட நூலக அலுவலர்களை நியமிக்கத் தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு குறித்து பள்ளிக் கல்வித் துறை, மனிதவளத் துறை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), முதன்மை கணக்காயர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்து, விசாரணையை வருகிற ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி S.G. சூர்யாவிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.