ETV Bharat / state

மதுரை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் திறக்க சனி ஞாயிறு தடை - Madurai Meat shop banned from opening on saturday sunday

மதுரை : கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்டத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் இறைச்சிக் கடைகள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் டி ஜி வினய் தடை விதித்துள்ளார்.

madurai collector
madurai collector
author img

By

Published : May 15, 2020, 1:12 AM IST

கடந்த சில வாரங்களாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் இறைச்சி கடைகள் திறப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் தடை தொடர்கிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாகத் தங்குதடையின்றி கிடைப்பதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சில இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று கடைகளில் பொருள்களை வாங்குகிறார்கள். அதுபோன்ற, கடைகளுக்குச் சீல் வைக்கப்படுகிறது.

போதிய சமூக இடைவெளி (ஆறு அடி) விட்டு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியமாக தேவைப்படும் பொருள்களை வாங்கவேண்டும்.

எனவே, மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயை தடுப்பதற்காகப் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் மாட்டுத்தாவணி, நெல்பேட்டையில் உள்ள மீன் மொத்த வியாபார கடைகள் 16.05.2020 (சனிக்கிழமையும்), மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சி கடைகள் 17.05.2020 (ஞாயிற்றுக்கிழமையும் ) திறப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை - சத்யேந்தர் ஜெயின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.