ETV Bharat / state

'சிஏஏ நிறைவேறியதற்கு காரணமே அதிமுகவும் பாமகவும் தான்' - திருமாவளவன் - latest thirumavalavan speech

மதுரை: குடியுரிமைச் சட்டம் நிறைவேறியதற்கு காரணம் அதிமுகவும் பாமகவும் தான் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திப்பு
தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திப்பு
author img

By

Published : Jan 9, 2020, 6:54 PM IST

மதுரை விமான நிலையத்தில் விடுதலைs சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதுமையான முறையில் சட்டத்தை இயற்றி, மக்களிடம் ஆதரவு கேட்டுச்செல்கின்றனர். இந்த அளவிற்கு சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவிவருகிறது. அரசியல் கட்சியைத் தாண்டி ஜனநாயக சக்திகள் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகள் இணைந்து ஆதரவு தந்ததால்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெறும் அளவிற்கு போராட்டங்கள் வெடிக்கக் காரணம் ஏற்பட்டுள்ளதும் அதனால்தான்.

தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திப்பு

மறைமுக தேர்தல் காரணமாக பிரதான கட்சியின் வெற்றி வேட்பாளர்களைச் சொகுசு விடுதியில் தங்க வைப்பது போன்ற கலாசாரம் ஏற்படக்கூடாது என்பதற்காகதான், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை வேண்டும் என்கிறோம். அதனால்தான் மறைமுக தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். பாஜக அரசின் வேண்டுகோளுக்கிணங்க அதிமுக அரசு செயல்படுவது, அதன் பலவீனத்தைக் காட்டுகிறது” என்றார்.

இதையும் படிங்க...உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்!

Intro:*மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பேட்டி*Body:மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பேட்டி

இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதுமை அரசியல் வரலாற்றில் இதுதான் முதன்முறையாக அரசு சட்டத்தை இயற்றி மக்களிடம் ஆதரவு கேட்டு செல்கின்றனர் இந்த அளவிற்கு சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிர்ப்பு நிலவுகிறது அரசியல் கட்சியை தாண்டி ஜனநாயக சக்திகள் மிகக்கடுமையாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சி சார்ந்தவர் அல்லாதவர் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா தான் இயற்றிய சட்டத்திற்கு தானே ஆதரவு பேரணி நடத்துவது புதுமையாக இருக்கிறது.

அதிமுக, பாமக இணைந்து ஆதரவு தந்ததால் தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது துப்பாக்கிச்சூடு அளவிற்கு போராட்டங்கள் வெடிக்கக் காரணம் ஏற்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் அதிமுக பாமக நிலைப்பாடு தான் காரணம் தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமே ஆனால் NRA, NPR போன்றவற்றில் ஆதரவு அளிக்கவில்லை என்று முடிவெடுத்து ஆனால் அதனுடைய நிலைப்பாட்டை மக்கள் வரவேற்க செய்வார்கள் அமைச்சர் அமைச்சர் ஆர் பி உதயகுமார்யின் கருத்து அதிகாரப்பூர்வமானதா என்று தெரியவில்லை.

அதிமுக தன் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு இது ஒரு வழி அதனை அதிமுக தலைமை முடிவு எடுத்திருக்கலாம்.

இந்த சட்டம் தமிழகத்தில் ஒன்றாம் தேதி நடைமுறைக்கு வரும் என்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது தனது நிலைப்பாட்டிலிருந்து அதிமுக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மறைமுக தேர்தல் காரணமாக பிரதான கட்சி வெற்றி வேட்பாளர் செகுசு விடுதியில் தங்க வைப்பது போன்ற கலாச்சாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கவேண்டும் தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.

ஊழல் பெருகுவதற்கு இதுபோன்ற நடைமுறைகள் தான் காரணம்.

இதுபோன்ற போக்கு ஜனநாயகத்தில் பெரிய தீங்கை ஏற்படுத்தும்.

நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் பாஜக அரசு கொடுக்கின்ற வேண்டுகோளுக்கு இணங்க அதிமுக அரசு செயல்படுவது அதிமுக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது.

நேத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்ற வேளையில் பிரதமர் மோடி அவர்கள் பெல் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்தது கண்டிக்கத்தக்கது.

பட்ஜெட் பற்றி மக்களிடம் கருத்து கேட்பது நாடகம் இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது இந்த நேரத்தில் அவர் கருத்து கேட்கிறார் என்றால் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பட்ஜெட் தயாரித்து விட்டு பின் மக்களிடம் கருத்து கேட்பது என்பது நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டு களில் அனைத்து சமுதாயத்தையும் சேர்த்து நடத்த வேண்டும்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.