மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் பூதமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது பொட்டம்பட்டி கிராமம். இங்கு அரசு சார்பில் கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறைகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதீன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகள், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை ஒத்திருப்பதுடன், அந்த காட்சியும் சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ளது.