மதுரையில் கடந்த நான்கு மாதங்களில் ஆட்சியர்கள் அடுத்தடுத்து மாறி வருகின்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் இன்று மதுரை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுகொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம், வருவாய்த்துறையில் அளிக்கப்பட்டுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
இந்திய அரசாணை 317இன் கீழ் வீட்டுமனை வழங்கும் திட்டம் குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக்கூறினார்.
மேலும், வைகை ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து புகார் அளிக்கப்படுமாயின் அதற்கு விரைந்து தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சவுடு மணல் அள்ள தடைகோரிய வழக்கு - மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு