ETV Bharat / state

நீட் பற்றி குடியரத்தலைவர் அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.

author img

By

Published : Jun 21, 2023, 1:19 PM IST

Updated : Jun 21, 2023, 1:31 PM IST

நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்குக் கிடைக்கவில்லை என ஆர்டிஐ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காணாமல் போவது கடிதமல்ல, நிர்வாக நேர்மை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

maduraimp s venkatesan
மதுரை எம் பி சு. வெங்கடேசன்

மதுரை: நீட் தேர்வு தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிக்கான மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து நான் ”மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு” கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி அன்று கடிதம் எழுதி இருந்தேன்.

அதில் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றிய நீட் மசோதா கடந்த 15 மாதங்களாக ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தேன்.

இதற்கு கடந்த மாதம் மார்ச் 3ஆம் தேதி குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு - மருத்துவமனை அறிக்கை

இதனையடுத்து பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI reply) அதிர்ச்சி அளிக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என ஆர்டிஐ தனது தகவலில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்திய நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத்தலைவர் மாளிகை அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது.

”காணாமல் போனது கடிதமல்ல... நிர்வாகத்தின் நேர்மை” என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில் 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர உடனடியாக தலையிட்டு ஆவன செய்யுமாறு அக்கடிதத்தில் வேண்டியுள்ளேன்.

மேலும் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்னையில் ஒன்றாக இருக்கும் நீட்டில் ஒன்றிய அரசு நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்'' என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Elon Musk: நான் மோடியின் ரசிகன் - எலான் மஸ்க்

Last Updated : Jun 21, 2023, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.