ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி உற்சவ விழா கொடியேற்றம்

author img

By

Published : Jan 20, 2022, 3:49 PM IST

Updated : Jan 20, 2022, 9:04 PM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி உற்சவம் விழா கொடியேற்றம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Madurai Meenakshi
Madurai Meenakshi

மதுரை : உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி உற்சவம் விழா கொடியேற்றம் இன்று (ஜன.20) மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா தான் அதிக நாள்கள் நடைபெறும் திருவிழாவாகும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

Meenakshi
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம்

இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சியும் சுந்தரேச பெருமானும் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Madurai Meenakshi
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்றம்

இந்நிலையில் மாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு வரும் பிப்.8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 10 நாள்கள் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

Madurai Meenakshi Sundareswarar Temple  teppam festival  Flag hoisted
கொடி மரத்துக்கு தீபாரதனை

கரோனா தொற்று மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக மீனாட்சியம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோயிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் சட்டத்தேரில் சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வர உள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி உற்சவ விழா கொடியேற்றம்

தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோயில் இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : 53 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி கோயில் பூஜை செய்த மதுரை ஆதீனம்!

Last Updated : Jan 20, 2022, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.