மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்குப் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு மதுரை மல்லி விலை இன்று கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டது.
பிற பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு, முல்லை ரூ.1,200, பிச்சி ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,500, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.100, செண்டுமல்லி ரூ.80, கோழிக் கொண்டை ரூ.70, தாமரை ஒன்றுக்கு ரூ.10, மரிக்கொழுந்து ரூ.120 என விற்பனை செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தீபாவளி திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: தீபாவளி விடுமுறை... ரூ.600 கோடி மது விற்பனைக்கு இலக்கு...