ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்- பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகள் கட்டுப்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மட்டும் சத்திரமா? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

author img

By

Published : Oct 27, 2022, 2:13 PM IST

மதுரை: தூத்துக்குடி பாஜக மாவட்டச் செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 2022 அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.

அக்டோபர் 30ஆம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.

காலம் காலமாக நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனு இன்று (அக் 27) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருச்செந்தூர் முருகன் கோயில் முழுவதுமாக தனியார் கையில் உள்ளது.

திருப்பதி கோயில்களில் இதேபோன்று உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் மட்டும் சத்திரமா? இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியும். கோயில் பணக்காரர்களுக்கானது கிடையாது.

கடவுள் அனைவருக்கும் சமமானவர். உலகில் உள்ள முருகன் கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் மிக பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே சென்று உட்கார்ந்தால் அனைத்தும் சரியாகி விடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும். தேவையில்லா நடைமுறைகளை ஒழிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை காப்பாற்ற புதிய வழிமுறைகள் கொண்டு வர வேண்டும். திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதியில் உள்ளது போன்ற கட்டுபாட்டு நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள கோயிலின் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும். இதனை இந்து அறநிலையத்துறை ஆணையர், தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகள் கட்டுப்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் மகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.