ETV Bharat / state

சேதமான அலை தடுப்புச் சுவர்: பொதுப்பணித் துறை பதிலளிக்க உத்தரவு! - சேதமடைந்த அலை தடுப்புச் சுவர்

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட கடற்கரையோரப் பகுதிகளில் அலை தடுப்புச் சுவர் கட்டக்கோரிய வழக்கில் பொதுப்பணித் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench
author img

By

Published : Oct 31, 2019, 7:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிலை, இரவிபுத்தன் துறை, சின்னத்துரை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்தக் கடலோர மீனவ கிராமங்களில் சுமார் 48 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதிகளில் 830 ஆழ்கடல் விசைப்படகுகள், ஆயிரத்து 500 நாட்டுப் படகுகள், 500 கட்டுமரங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் கடற்கரையோரம் வசிக்கின்றனர். இதனால், கடலிலிருந்து வீசும் அலைகள், மீனவக் குடியிருப்புகளுக்குள் புகாத வண்ணம் கடற்கரையோரம் அலை தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது.

தற்போது, இந்த அலை தடுப்புச்சுவர் தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், இந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் அரிப்பு ஏற்படுகிறது. பாலங்கள் சேதமடைந்துள்ளன. எனவே, புதிதாக மேற்கண்ட கிராமங்களில் அலை தடுப்புச் சுவர் கட்ட உரிய உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, குமரி மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர், நாகர்கோவில் நிர்வாக பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் அலை தடுப்பு சுவர் கட்டக்கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிலை , இரவிபுத்தன் துறை , சின்னத்துரை உள்ளிட்ட மீனவ. கிராமங்களின் , கடற்கரையோரம் அலை தடுப்பு சுவர் கட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணையில் குமரி மாவட்ட ஆட்சியர், மற்றும் மதுரை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர், நாகர்கோவில் நிர்வாக பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு ..
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் அலை தடுப்பு சுவர் கட்டக்கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிலை , இரவிபுத்தன் துறை , சின்னத்துரை உள்ளிட்ட மீனவ. கிராமங்களின் , கடற்கரையோரம் அலை தடுப்பு சுவர் கட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணையில் குமரி மாவட்ட ஆட்சியர், மற்றும் மதுரை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர், நாகர்கோவில் நிர்வாக பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு ..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஆண்டோ லெனின் ஆண்டனி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிலை , இரவிபுத்தன் துறை , சின்னத்துரை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கடலோர மீனவ கிராமங்களில் சுமார் 48 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கே ஆழ் கடல் விசைப்படகுகள் 830 ம், நாட்டுப் படகுகள் சுமார் ஆயிரத்து 500 ம், கட்டுமரங்கள் சுமார் 500 உள்ளன . இந்த கிராம மக்கள் கடற்கரையோரம் வசிக்கின்றனர்.
கடலிலிருந்து வீசும் அலைகள், மீனவ குடியிருப்புகளுக்கு புகாத வண்ணம் கடற்கரையோரம் அலை தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது..இந்த அலை தடுப்புச்சுவர் தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதனால், இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் . வீடுகளில் அரிப்பு ஏற்படுகிறது. பாலங்கள் சேதமடைந்துள்ளன. எனவே புதிதாக மேற்கண்ட கிராமங்களில் அலை தடுப்பு சுவர் கட்ட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார் .

இந்த மனு நீதிபதிகள், சிவஞானம் , தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து , குமரி மாவட்ட ஆட்சியர், மற்றும் மதுரை பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர், நாகர்கோவில் நிர்வாக பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர் ..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.