மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தவழும் மாற்றுத்திறனாளிகள் 125 பேருக்கு கரோனா நிவாரண பொருள்களை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் இன்று வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சொர்க்கம் ராஜா அளித்த பேட்டியில்,
"தற்போதைய ஊரடங்கு காலத்தில் தவழும் மாற்றுத்திறனாளிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கஷ்டங்களை போக்கும் விதமாக பல்வேறு அமைப்புகளின் உதவியோடு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணப் பொருள்களை மதுரை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இப்பொருள்கள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் உள்ள 125 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு சங்கத்தின் மூலமாக வழங்கப்படும். தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறு நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக குடை பிடித்து பங்கேற்றுள்ளோம். அதேபோன்று அனைத்து பொதுமக்களும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்" என்றார்
இதையும் பார்க்க: கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீது பரிசோதனையை தொடங்கிய அமெரிக்கா!