ETV Bharat / state

"வாகன உற்பத்தி துறையில் அதிக வேலையிழப்பு ஏற்படும்" - அமைச்சர் பாண்டியராஜன் வேதனை - Ma Foi Pandiarajan talks about automobile industry

மதுரை : வாகன உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையால் ஒரு லட்சம் பேர் வேலையிழந்துள்ள நிலையில் இன்னும் அதிகமானோர் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ma-foi-pandiyarajan-talks-about-auto-mobile-industry
author img

By

Published : Aug 19, 2019, 10:05 PM IST

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்தில் இளந்தமிழர் பயிற்சி பட்டறை ஞாயிறன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாம் நாளான இன்று சிறப்பு விருந்தினராக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு தொடங்கி, தற்போது 35 நாட்கள் ஆகின்றன. மேலும் நான்கு மாதங்கள் அங்கு ஆய்வு நடைபெறவுள்ளன. அதற்கிடைப்பட்ட காலத்தில் கீழடி சென்று ஆய்வு நடத்தவுள்ளேன்.

மிகவும் இக்கட்டான நிலையில் வாகன உற்பத்தித்துறை உள்ளது. இதுவரை இத்துறையில் ஒருலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்தியாவின் மொத்த வாகன உற்பத்தியில் 42 விழுக்காடு உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஆகையால் இதன் தாக்கம் தமிழகத்தில் இருக்கும்.

அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு தற்போது தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் உதவி செய்யவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படி செய்தால் மட்டுமே, வேலை இழப்புகள் அதிகம் ஆகாமல் தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Intro:ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வேலை இழப்பை தமிழகம் சந்திக்கவிருக்கிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தற்போதைய சூழலில் ஆட்டோமொபைல் துறையில் தமிழகத்தில் மிகப்பெரிய வேலை இழப்பு அடுத்த மூன்று மாதங்களிலோ ஒரு வருடத்திலோ நிகழ வாய்ப்பு உள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் கூறினார்Body:ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வேலை இழப்பை தமிழகம் சந்திக்கவிருக்கிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தற்போதைய சூழலில் ஆட்டோமொபைல் துறையில் தமிழகத்தில் மிகப்பெரிய வேலை இழப்பு அடுத்த மூன்று மாதங்களிலோ ஒரு வருடத்திலோ நிகழ வாய்ப்பு உள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் கூறினார்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை கடந்த ஞாயிறன்று துவங்கி நடைபெற்று வருகிறது அதன் இரண்டாம் நாளான இன்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கி தற்போது 35 நாட்கள் ஆகின்றன. மேலும் நான்கு மாதங்கள் அங்கு ஆய்வுகள் நடைபெற உள்ளன அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கீழே அடிக்கி சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

மிகவும் இக்கட்டான கட்டத்தில் தமிழகத்தின் வாகன உற்பத்தித் துறை உள்ளது இந்தியாவின் மொத்த வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 42 விழுக்காடு ஆகும். ஆகையால் தற்போதைய சூழலில் தமிழகத்தில் இதன் தாக்கம் இருக்கும். வாகன உற்பத்தித் துறை சார்ந்த வல்லுநர்கள் இது போட்ட சூழலை சமாளிப்பதற்கு என்று தனியாக தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் இதற்கு முன்பாக இருந்த தமிழக அரசும் ஜவுளித்துறையில் அப்படி ஒரு நிதியத்தை உருவாக்கி உள்ளது.

எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன அடுத்த சில ஆண்டுகளுக்குள் தற்போது ஓடுகின்ற வாகனங்களில் சரிபாதி எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கக் கூடும்.

வாகன உற்பத்தித் துறையில் இதற்கு முன்பாக ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் தற்போது அந்த நிலை கூடுதலாக வாய்ப்பு உள்ளது இதனை சரி செய்வதற்கு தமிழக அரசும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு தற்போது ஆலோசித்து வருகிறது இதற்கு மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.