மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் விஜயபாஸ்கள், செல்லூர் ராஜூ, உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி ஜி வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரைப் பாராட்டினார். குறிப்பாக மதுரையில் காலியாக இருந்த மாநகராட்சி சுகாதார அலுவலர் பதவிக்கான நபரை நியமித்ததைப் பாராட்டிப் பேசியபோது, ”மண்டூக முனிவருக்கு விமோசனம் கிடைத்ததைப் போன்று, மதுரைக்கு அழகர் பெருமான் வந்தால்தான் விமோசனம் கிடைக்கும் என்பார்கள். அதுபோன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரைக்கு வந்து விமோசனங்களை வழங்கியுள்ளார்” என்று புகழாரம் சூட்டினார்.
இதனை மேடையிலிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சிறிது வெட்கத்துடன் ரசித்து மகிழ்ந்தார்.
இதையும் படிங்க: 'குணமடைந்தோர் பிளாஸ்மா தெரபிக்கு முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்