மதுரையில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையம் உள்ளிட்ட 3 முக்கிய பேருந்து நிலையங்களிலுள்ள கடைகளின் உரிமையாளர்கள் 69 லட்சத்து 87 ஆயிரத்து 370 ரூபாய் வரையில் வரி நிலுவை வைத்துள்ளதாக ஆர்டிஐ (Right to Information Act - RTI) மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையம் (Madurai MGR bus stand), ஆரப்பாளையம் பேருந்து நிலையம் (Arapalayam bus stand), அண்ணா பேருந்து நிலையம் என மூன்று முக்கியப் பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 317 கடைகளில் 277 கடைகள் உள்ளன. மூன்று பேருந்து நிலையங்களில் உள்ள 277 கடைகளின் உரிமையாளர்கள் ஒரு கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதில் குறிப்பாக, அரசு நிறுவனங்களான தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்களுடைய ஏடிஎம் மையங்களுக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 பேருந்து நிலையங்களில் ஒரே நபர்களுக்கு மூன்று முதல் நான்கு கடைகள் வாடகைக்கு வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி பேருந்து நிலையங்களில் செயல்படும் கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வரிபாக்கி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வரி பாக்கி வைத்தவர்களிடம் விரைந்து வசூல் செய்ய வேண்டும் அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அறிவிப்பு பலகை விபத்து - உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.5 லட்சம் தர ஆணை