மதுரை: உசிலம்பட்டியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி குருசாமி தாத்தா காந்தி பிறந்த நாளான இன்று(அக்.1) காலமானார்.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் குருசாமி தாத்தா. காந்தியடிகளின் மீது கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இவர், 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு சுதந்திர போராட்டத்தின் போது உசிலம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
சுதந்திரம் பெற்ற பின்னும் காந்தியடிகளின் கொள்கைகளை கிராமத்தில் உள்ள இளைஞர், பள்ளி மாணவ மாணவிகளிடையே விதைத்து வந்த இவர் கிராமத்து காந்தியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போதிலும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேசிய கொடி, இனிப்புகளை பள்ளிக்கே சென்று வழங்கி வந்த இந்த குருசாமி தாத்தா, இன்று(அக் 1) காந்தி ஜெயந்தியன்று நள்ளிரவு 12:30 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது இறுதிச்சடங்கு இன்று(அக்.1) மதியம் அவரது சொந்த ஊரான தொட்டப்பநாயக்கணூரில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி: ஒன்றிணைந்து மரியாதை செய்த செலுத்திய ஈபிஎஸ், ஓபிஎஸ்