ETV Bharat / state

மருத்துவத்துறையில் பயன்படுத்தும் மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தீவிர குற்றம் ... மதுரை உயர் நீதிமன்றம்

மருத்துவத்துறையில் பயன்படுத்தக்கூடிய மருந்துகளை சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்துவதும், அதனை விற்பனை செய்வதும் தீவிர குற்றமாக பார்ப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரியவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவத்துறையில்
மருத்துவத்துறையில்arat
author img

By

Published : Aug 20, 2022, 5:42 PM IST

மதுரை :புதுக்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "புதுக்கோட்டையில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மனுதாரர் அண்ணாதுரை மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போதை தரக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வழக்கில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவத் துறையில் மிகவும் அரிதாக பயன்படுத்தக்கூடிய சில மருந்துகளை சட்டவிரோதமாக போதைக்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கொடூரமான குற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசு இதுபோன்று போதை மருந்துகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சிலர் ஆன்லைன் மூலமாக வாங்கி இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும். மேலும் மொத்த சமூகமும் பாதிக்கக்கூடும்.

எனவே மருந்து எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து மனுதாரரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது போல் அரிதாக பயன்படுத்த கூடிய மருந்துகளை போதைக்காக உபயோகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. இது தீவிர குற்றமாக நீதிமன்றம் கருதுவதாக கூறி மனுதாரரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.