ETV Bharat / state

கரோனாவுக்கு மத்தியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்வாறு அனுமதி கொடுப்பது? - விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுப்பது

மதுரை: தினம்தோறும் ஆறாயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

How to give permission for Ganesha Chaturthi ceremony amidst corona impact said madurai high court bench

author img

By

Published : Aug 19, 2020, 12:50 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் கடந்த 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் முதலாம் நாளான ஆகஸ்ட் 21ஆம் தேதி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் 25 ஏழை எளியோருக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். விநாயகர் சதுர்த்தி நாளன்று ஐந்து ரதத்துடன் விநாயகர் ஊர்வலம் நடைபெறும்.

உரிய பாதுகாப்பு, தகுந்த இடைவெளி பின்பற்றி இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க பல்வேறு அலுவலர்களிடம் நேரில் சென்று மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 21 மற்றும் 22ஆம் தேதி நடத்துவதற்கான அனுமதி அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விநாயகரை வைத்து வழிபடுவதற்கு அனுமதியும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைக் கேட்ட நீதிபதி, கரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்க கூடிய சூழலில் தமிழ்நாட்டில் தினம்தோறும் ஆறாயிரம் நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார். இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும். இந்த விழாவினை நடத்த அனுமதியளித்தால் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படலாம். கரோனா வைரஸின் தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது.

இதுபோன்ற சூழலில் இந்த மனு தேவையில்லாத ஒன்று. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.