ETV Bharat / state

நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமின் வழக்குகள் தள்ளுபடி! - முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் முன் ஜாமின் கோரி தாக்கல் வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 10:29 PM IST

மதுரை: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு 'நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் (neomax private limited) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக பாஜக பிரமுகர் வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் எனப் பலர் உள்ளனர்.

தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டில் இரட்டிப்பாகத் தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இவர்களின் வாக்குறுதியை நம்பி 10 லட்ச ரூபாய் எனப் பல கோடிக்கு மக்கள் முதலீடுகளைச் செய்துள்ளனர்.

ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பணம் இழந்த பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். அதனடிப்படையில் நிறுவனத்தைச் சார்ந்த 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிலரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் நியோமேக்ஸ் ப்ராபரிட்டிஸ் இயக்குநர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன் கமலக்கண்ணன் நாராயணசாமி மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் குறிப்பாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அந்த பணத்தை வெளிநாடுகளில் இந்த நிறுவனம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் காவலில் எடுத்து விசாரணை செய்வதால் மட்டுமே முதலீடு செய்த மக்களின் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அரசு தரப்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனைப் பதிவு செய்த நீதிபதி இளங்கோவன் வழக்கு ஆரம்பக் கட்ட விசாரணையில் உள்ளதால் அனைவரின் முன் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: "வாதங்களை தொடங்காவிட்டால் அரசின் விளக்கங்களை கேட்காமலே தீர்ப்பு வழங்கப்படும்" - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.