ETV Bharat / state

ஒன்றியத் தலைவர் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்த உத்தரவுவிடக் கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

High court bench madurai
High court bench madurai
author img

By

Published : Jan 14, 2020, 3:48 PM IST

சிவகங்கையை சேர்ந்த சுப்பையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் , நான் திருப்புவனம் பஞ்சாயத்து ஒன்றியத்தில் 12ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டேன். திருப்புவனம் பஞ்சாயத்து ஒன்றியத்தில் மொத்தம் பதினேழு வார்டுகள் உள்ளன. இதில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் , TMMK இரண்டு இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன.

திமுகதான் திருப்புவனம் ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுக தேர்தலுக்காக. அனைத்து கவுன்சிலர்களும் வந்திருந்தனர். காலை 11 மணிக்கு தேர்தல் என்ற நிலையில், 10.15 மணியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தைக் காட்டி தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இது ஏற்புடையதல்ல, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துள்ளனர் .

எனவே திருப்புவனம் ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் வழக்கறிஞர் குழு அமைத்து கண்காணிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மறைமுக தேர்தல் அன்று நடந்த பிரச்னைகளைக் கூறி வாதம் செய்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Intro:திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி , நியமனம் செய்து விரைவில் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடத்த உத்தரவு விட கோரிய வழக்கு.

மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.
Body:திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி , நியமனம் செய்து விரைவில் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடத்த உத்தரவு விட கோரிய வழக்கு.

மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கையை சேர்ந்த சுப்பையா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில் , நான் திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனில் 12 வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டேன்.

திருபுவனம் பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் பதினேழு வார்டுகள் உள்ளன.
இதில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் , TMMK இரண்டு இடங்களிலும் சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

திமுக தான் திருபுவனம் ஒன்றி குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுக தேர்தலுக்காக. அனைத்து ,கவுன்சிலர்களும் வந்திருந்தனர்.

காலை 11 மணிக்கு தேர்தல் என்ற நிலையில் 10:15 மணி அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தைக் காட்டி தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்து தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இது ஏற்புடையதல்ல ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துள்ளனர் .எனவே திருப்புவனம் யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு சிறப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி , மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை நியமனம் செய்து விரைவில் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் வழக்கறிஞர் குழு அமைத்து கண்காணிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனு தார்ர் தரப்பில் மறைமுக தேர்தல் அன்று நடந்த பிரச்சினைகளை கூறி வாதம் செய்தனர் இதனை பதிவு செய்த நீதிபதிகள்
மனு குறி மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 22 தேதி ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.