ETV Bharat / state

மதுரையில் வெளியேறும் ரசாயன நுரை.. செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

Madurai news: மதுரை அயன்பாப்பாகுடி கண்மாயிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் கழிவு நீரால் உருவான ரசாயன நுரையின் முன்பாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Etv Bharatசெல்ஃபி எடுத்துக் கொண்ட பொதுமக்கள்!
Etv Bharatமதுரையில் பாசனக் கால்வாயில் வெளியேறும் ரசாயன நுரை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 7:47 AM IST

மதுரையில் பாசனக் கால்வாயில் வெளியேறும் ரசாயன நுரை

மதுரை: அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால், வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் நீரில் இருந்து ரசாயன நுரை பொங்கி வருகிறது. மலையாக குவிந்துள்ள நுரையால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கழிவு நீரால் உருவான நுரையின் முன்பு மக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் அருகே அயன்பாப்பாக்குடி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்கின்றன.

தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மழை நீரோடு கலந்து அயன்பாப்பாக்குடி கண்மாயின் பாசனக் கால்வாயில் கலக்கிறது. இவ்வாறு பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால், அயன் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து, வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய குற்றவாளி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல் ஆய்வாளர் - மதுரையில் பரபரப்பு!

மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால், நீரின் வேகத்தை ஆகாயத்தாமரைச் செடிகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால், வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில், பஞ்சு போன்ற வெண்மை நிற நுரை உருவாகி, சாலைகளில் மலைபோல் குவிந்து வருகிறது. கழிவு நீரால் உருவான நுரையானது, மலைபோல் பெருகி காற்றில் பறந்து, அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சாலையில் நுரை பொங்கி மலை போல் காட்சி அளிப்பதைக் கண்டு, அப்பகுதியைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு செல்கின்றனர். ஆகாயத்தாமரைகளை அகற்றி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்தால், இது போன்ற நுரை பொங்கி சாலையில் சென்று, வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரையில் பெய்து வரும் கன மழையால் வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீரோடு பாசனக் கால்வாயில் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக கண்மாயில் கலக்கிறது.

இதையும் படிங்க: 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு... தருமபுரி பள்ளி மாணவர்கள் சாதனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.