ETV Bharat / state

மதுரை மல்லிகை கிலோ ரூ.400க்கு விற்பனை - வரத்து அதிகரிப்பால் மேலும் குறைய வாய்ப்பு! - madurai jasmine

மல்லிகைக்கு பெயர் போன மதுரையில் மல்லிகை வரத்து அதிகமானதால் விலை குறைய வாய்ப்புள்ளதாக பூ வியாபாரிகள் சங்கத்தலைவர் கூறியுள்ளார்.

மல்லிகை வரத்து அதிகமானதால் விலை குறைய வாய்ப்பு

author img

By

Published : Jul 7, 2023, 3:29 PM IST

மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வலையங்குளம், கப்பலூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இது மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக மதுரையைச் சுற்றி, பல்வேறு பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகை, கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றதாகும். இதன் கூடுதலான மணம், தரம் மற்றும் தன்மை ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்கும் வாய்ப்பு உண்டு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ''மதுரை குண்டு மல்லிகை'' என்றே பூக்கள் வியாபாரிகள் பெயர் வைத்து விற்பனை செய்கின்றனர்.

மதுரை மல்லிகை வெளிமாவட்டங்கள் மட்டுமன்றி, பிற மாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மலர் வணிக வளாகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5 டன் மல்லிகைப் பூக்கள் மதுரை மலர்ச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சராசரியாகப் பத்திலிருந்து பதினைந்து டன்கள் மதுரை குண்டு மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை மல்லிகை இன்று (ஜூலை 7) காலை நிலவரப்படி, கிலோ ரூபாய் 500க்கு விற்பனையாகி வந்தது. அதன் பின் பிற்பகலில் ரூபாய் 400 என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிற பூக்களான முல்லை ரூபாய் 300க்கும், பிச்சிப்பூ ரூபாய் 400க்கும், சம்பங்கி ரூபாய் 80க்கும், செண்டு மல்லி ரூபாய் 100க்கும், பட்டன் ரோஸ் ரூபாய் 130க்கும் விற்கப்படுகிறது. மேலும் பிற பூக்களின் விலையும் சற்று குறைவாகவே காணப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ''தற்போது மதுரை மல்லிகையின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். அண்மைக்காலமாக நிலவிய கடும் வெப்பநிலை குறைந்து இதமான பருவநிலை உள்ளதால், மல்லிகை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புண்டு. முகூர்த்த நாட்களையொட்டி மல்லிகை பூக்களின் விற்பனையில் விலை அதிகரித்து காணப்படும்.

தற்போது முகூர்த்த நாட்கள் எதுவும் இல்லை என்கின்ற காரணத்தாலும் சற்று விலை குறைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் விலைக்குறைவின் காரணமாக அதிக அளவு மல்லிகை பூக்களை வாங்கிச் செல்கின்றனர்” என வியாபாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீனாட்சி ஊரில் மீன் சின்னம் வேண்டாமா? - அங்கலாய்க்கும் மதுரக்காரய்ங்க..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.