மதுரை நாராயணபுரம் பகுதியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் நள்ளிரவு ஏற்பட்ட சிறிய தீயானது மளமளவென்று பரவி வணிக வளாகம் முற்றிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளைச் சேர்ந்த, 20 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளதாகவும், இந்த விபத்தில் சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாகியதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: தீப விளக்கைப் பற்ற வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் - பெண் உயிரிழப்பு!