மதுரை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள், விஜய்யை அண்ணாவாக உருவகித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அதில், “நாட்டிற்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார். பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாக இருந்தார். எங்கள் கடன்தீர "மீண்டும் அண்ணா", தமிழர் நீங்கள் "வேண்டும் அண்ணா", யாரு அண்ணா தளபதி தானே” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், நடிகர் விஜய் ரசிகர்கள் நகர் முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அக்டோபரில் 'அரண்மனை 3' ரிலீஸ்