ETV Bharat / state

கமல் ஹாசன் பணத்துக்காக பிரச்சாரம் செய்ய கால் சீட் கொடுத்திருப்பார்.. செல்லூர் ராஜூ விமர்சனம்.. - Erode by election

திரைப்படத்தில் நடிப்பதை விட அதிகமாக பணம் தருவதாக கூறி இருப்பார்கள் என்பதால் அரசியலில் பிரச்சாரம் செய்ய கமல் ஹாசன் கால் சீட் கொடுத்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

கமல் ஹாசன் பணத்துக்காக பிரச்சாரம் செய்ய கால் சீட் கொடுத்திருப்பார்.. செல்லூர் ராஜூ விமர்சனம்..

author img

By

Published : Feb 19, 2023, 6:56 PM IST

Updated : Feb 19, 2023, 7:19 PM IST

மதுரை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளை அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று (பிப்.19) நடைபெற்றது.

கமல் ஹாசன் பணத்துக்காக பிரச்சாரம் செய்ய கால் சீட் கொடுத்திருப்பார்.. செல்லூர் ராஜூ விமர்சனம்..

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வித்தியாசமானவர்கள். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும் திமுக அமைச்சர்களே அதிக அளவில் இருக்கின்றனர். திமுக அமைச்சர் பொன்முடிக்கு அப்பகுதியில் ஓட்டு இல்லை, அவரிடம் ஓட்டு கேட்கும் அளவுக்கு நான் முட்டாளும் இல்லை. அவரை பிரச்சாரத்தின்போது மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன் அவ்வளவுதான். ஈரோடு கல நிலவரம் சிறப்பாக உள்ளது.

ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை கிழக்குத் தொகுதி மக்கள் கொடுப்பார்கள். ஜனநாயகம் வெல்லுமா பணநாயகம் வெல்லுமா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். புது மாதிரியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு தருவது போல, வாக்காளர்களை கவர்வதற்காக திமுக புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது.

திருமங்கலம் ஃபார்முலா, அரவக்குறிச்சி ஃபார்முலா, தற்போது ஈரோடு கிழக்கு புதிய ஃபார்முலா கொண்டு வருகின்றனர். மக்களை கூண்டுகளில் அடைப்பது போல் அடைத்து ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது வசதிக்கேற்ப உணவுகள் பணம் வழங்கி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பணமழை பொழிகிறது. தேர்தல் ஆணையம் 14 இடங்களில் சீல் வைக்கின்றனர். ஒரு மணி நேரத்தில் திமுகவினர் மற்ற இடங்களில் கூடாரங்கள் அமைத்து அங்கு சென்று செயல்படுகின்றனர். சீல் வைப்பது தேர்தல் ஆணையம் கண்துடைப்பு போல் நடத்துகிறது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

கமல் ஹாசனின் கொள்கை பணத்திற்கானது மட்டும். கமல் ஹாசன் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் நடிக்கிறார். படம் நடிப்பதை விட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள். அதனால் பிரச்சாரம் செய்ய கால் சீட் கொடுத்திருப்பார். கமல் ஹாசனை மக்கள் அரசியல்வாதியாக பார்ப்பது இல்லை.

அவரை நல்ல நடிகராகவே பார்க்கின்றனர். கமல் ஹாசனை மக்கள் ரசித்து பார்ப்பார்கள். அவருடைய பேச்சை கேட்டால் ஓட்டு போடுபவர்களும், போட மாட்டார்கள். கமல் ஹாசனுக்கு பேச தெரியாது. அப்படி பேசினாலும் மக்களுக்கும் புரியாது. திமுக நேற்று வந்த கட்சி இல்லை. ஆட்களை பார்த்து யாரை எப்படி ஆஃப் செய்ய வேண்டும் என்பது தெரியும்.

கமல் ஹாசனை எந்த வகையில் ஆப் செய்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு ஆளுங்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் செயல்களை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நடிகர் மயில்சாமி மறைவுக்கு பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி!

Last Updated : Feb 19, 2023, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.