மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் வலையப்பட்டி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்டிப்படையில், காவல்துறையினர் ரோந்து சென்ற போது பள்ளி வளாகம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொன்டிருந்த பாலமேட்டை சேர்ந்த பழனிவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பாலமேடு பகுதியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், அப்பகுதி இளைஞர்களுக்கு பல நாட்களாக கஞ்சா சப்ளை செய்து மாணவர்களை சீரழித்தது தெரிய வந்தது. இந்நிலையில், பாலமேடு காவல்துறை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.