மதுரை: பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் இன்று (நவம்பர் 16) காலை 6.30 மணிக்கு, அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவரது வீட்டில் இயற்கை எய்தி உள்ளார். மேலும் 84 வயதான பாண்டியன், சினிமா ஆபரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் 1/14 ஏ, பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சேரன் தந்தை காலமானதைத் தொடர்ந்து, பல்வேறு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கையை காதலித்த இளைஞரை கொலை செய்த அண்ணன்.. திருப்பத்தூரில் நடந்த கொடூரம்!