ETV Bharat / state

திமுகவின் 178 வேட்பாளர்களில் 139 பேர் பேர் மீது கிரிமினல் வழக்குகள் - ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை - தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது போட்டியிடும் வேட்பாளர்களில் 466 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிக்கை அளித்துள்ளன.

வேட்பாளர்களில் 466 பேர் மீது கிரிமினல் வழக்குகள் - ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியீடு

author img

By

Published : Apr 3, 2021, 10:39 PM IST

மதுரை கேகே நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் சோகோ அறக்கட்டளையின் அறங்காவலர் மகபூப் பாஷா, நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் செல்வகோமதி ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்பாளர்கள் 466 பேர் மீது கிரிமினல் வழக்குகள் - ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியீடு

அப்போது, விக்டர் ராஜ் கூறுகையில், ’’தமிழ்நாடு சட்டப்பேரவைத் நடைபெறவுள்ள தேர்தலில் 234 தொகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் 3 ஆயிரத்து 559 பேரின் சுய உறுதிமொழி வாக்குமூலங்களை ஆய்வு செய்தோம்.
அதில், 202 வேட்பாளர்கள் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் 489 வேட்பாளர்கள் மாநில கட்சிகளை சார்ந்தவர்கள். 1001 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சார்ந்தவர்கள். 1867 வேட்பாளர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.

ஆய்வில் 3 ஆயிரத்து 559 பேரில் 466 பேர் (13%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 207 பேர் (6%) மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களில், 7 பேர் மீது கொலை வழக்கும் (ஐபிசி 302), 39 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் (ஐபிசி 307) 8 வேட்பாளர்கள் இது பெண்ணை மானபங்கப்படுத்தி தாக்கிய வழக்கும் (ஐபிசி 376) நிலுவையில் உள்ளன.

திமுகவின் 178 வேட்பாளர்களில் 139 பேர் மீதும் (76%) பாஜகவின் 20 வேட்பாளர்களில் 15 பேர் (75%) மீதும், காங்கிரசின் 21 வேட்பாளர்களில் 15 பேர் (71%) மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து வேட்பாளர்களில் மூன்று பேர் (60%) மீதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு வேட்பாளர்களில் இரண்டு பேர் (50%) மீதும் பாமகவின் 23 வேட்பாளர்களில் 10 பேர் (44%) மீதும் தேமுதிகவின் 60 வேட்பாளர்களில் 18 பேர் (30%)மீதும் அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் (24%) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
அதேபோன்று, ஆய்வில் 305 பேரும், இதில், 159 வேட்பாளர்களில் 652 பேர் கோடீஸ்வரர்களாவர். 21 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 15.64 கோடி, 20 பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 8.78 கோடி, அதிமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 9.91 கோடி, திமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 10.61 கோடி, தேமுதிக வேட்பாளர் களின் சராசரி சொத்து மதிப்பு 3.08 கோடி, பாமக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 3.52 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 1.03 கோடி. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 21.91 லட்சம் ஆகும்.

கல்வி விவரங்களை பொருத்தவரை 1731 வேட்பாளர்கள் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். இதில், 1443 பேர் பட்டப் படிப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் ஆவர். 193 பேர் டிப்ளமோ படித்தவர்கள். 106 பேர் படிக்காதவர்கள், 61 பேர் ஓரளவு படிக்க தெரிந்தவர்கள். 25 வேட்பாளர்கள் தங்கள் கல்வி விவரங்களை தெரிவிக்கவில்லை. வயதைப் பொறுத்தவரை 1451 வேட்பாளர்கள் 25 முதல் 40 வயதிற்கு உள்பட்டவர்கள். 1756 பேர் 41 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள். 348 பேர் 61 முதல் 80 வயதிற்கு உள்பட்டவர்கள். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று பேர். 24 வயதுக்கு உட்பட்டவர் ஒரே ஒருவர் ஆவார். இந்த தேர்தலில் 380 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளை உச்சநீதிமன்றம் கண்டிக்க வேண்டும். கொலை கற்பழிப்பு கடத்தல் ஆட்கடத்தல் போன்ற கொடூரமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க கூடிய கடுமையான குற்றச் செயல்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நபர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

கரை படிந்த வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்படவேண்டும். அந்த வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது அவசியம்.

ஆண்டுதோறும் தங்களது செயற்குழு உறுப்பினர்களின் குற்றவியல் தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும் மேலும் இதுபோன்ற தகவல்களை பொது மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளிக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அதேபோன்று அரசியல்வாதிகள் தொடர்பான குற்ற வழக்குகளை உரிய கால அவகாசத்தில் முடிக்க வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்புக்குள்ளான பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.