ETV Bharat / state

"குஜராத் பொண்ணு, தென்காசி பையன்".. காதல், கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..!

தென்காசி காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட விவகாரத்தில், முன் ஜாமின் கோரி பெண்ணின் தந்தை, தாய், இரண்டாம் கணவர் மற்றும் உறவினர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Krithika Patel kidnap
தென்காசி இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கு
author img

By

Published : Apr 13, 2023, 11:54 AM IST

மதுரை: தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில், அந்த பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து கிருத்திகாவின் உறவினர்கள் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

அப்போது, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும். முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், இரண்டாம் கணவர் மைத்திரிக், உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், "தொடர்ந்து முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வருவதால் வழக்கின் தற்போதைய நிலவரங்கள் என்ன என்பது குறித்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் கிருத்திகா பட்டேலிடம் நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும், ஆகவே கிருத்திகா பட்டியல் நேரில் ஆஜராக வேண்டும்" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தற்போது இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகா பட்டேல் தரப்பு வழக்கறிஞர், கிருத்திகா பட்டேல் குஜராத்தில் இருக்கிறார் மற்றும் மாரியப்பன் வினித் மற்றும் அவரின் குடும்பத்தினால் கிருத்திகா பட்டேல் கடத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் விடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் கூறியதைக் கேட்டு, கடும் கோபம் அடைந்த நீதிபதி இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு. முன் ஜாமின் கோரிய தந்தை, தாய் மற்றும் இரண்டாம் கணவர் ஆகியோர் எங்கு உள்ளனர் என கேள்வி எழுப்பினார். மனுதாரர்கள் தரப்பில், அவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, "தந்தை, தாய் மற்றும் இரண்டாம் கணவர் இங்கு இருக்கும் பச்சத்தில் கிருத்திகா பட்டியலை ஏன் அழைத்து வரவில்லை. குஜராத்தில் வைத்து ஆணவக் கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். பின்னர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கிருத்திகா பட்டேல் ஆஜராக மறுப்பு தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறி, இளம் பெண்ணின் தந்தை, தாய் இரண்டாவது கணவர் மற்றும் உறவினர்களின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மேலும் மனுதாரர்களை காவல் துறையினர் தேவைப்பட்டால் கைது செய்து விசாரணை செய்யலாம்" எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்த திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.