ETV Bharat / state

கரோனா பாதிப்பு: மதுரையில் 83, திருச்சியில் 103

author img

By

Published : Sep 15, 2020, 8:03 PM IST

கரோனா வைரஸால் இன்று மதுரையில் 83 பேரும், திருச்சியில் 103 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona-count-in-madurai-and-trichy-corportation

மதுரையில் கரோனா நிலவரத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் 3ஆவது வாரத்தில் இருந்து அதன் தாக்கம் தெரியத் தொடங்கியது. மே, ஜூன் மாதங்களில் உச்ச நிலையை அடைந்து ஜூலை இறுதி வாரத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத் துறையுடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை பல்வேறு காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தியதும் நாள்தோறும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியதும் வைரஸ் தொற்று குறைவதற்கு காரணமாக அமைந்தது.

இதுவரை மதுரையில் மட்டும் 15 ஆயிரத்து 477 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 ஆயிரத்து 371 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இதுவரை 374 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) மட்டும் 83 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்தனர். தற்போது வரை கரோனா வைரஸிற்கு 732 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் இன்று 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 17ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 14) வரை 854 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 8,014 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 871 பேர் கரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னை கேவலப்படுத்தியது பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.