மதுரை: இந்திய ரயில்வேயும், அஞ்சல் துறையும் இணைந்து பார்சல் சேவை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இரு துறைகளும் இணைந்து தற்போது தனியாக ஒரு பார்சல் விரைவு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 22) அதிகாலை 03.45 மணிக்கு 15 பார்சல் பெட்டிகளுடன் தனி பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் கூடல் நகரில் இருந்து கொல்கத்தா அருகே உள்ள சங்க்ரயில் சரக்கு நிலையத்திற்கு இயக்கப்பட்டது.
இந்த ரயிலில் கூடல் நகரில் இருந்து ஆயுர்வேத மருந்துகள், கிரிக்கெட் பந்துகள், ஏலக்காய் ஆகியவையும் திண்டுக்கல்லில் இருந்து கோழி முட்டைகளும் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. வழியில் இந்த ரயிலில் திருச்சி, விழுப்புரம், தாம்பரம், விஜயவாடா, பலாசோர், கரக்பூர், பன்ஸ்குரா, மச்சேடா ஆகிய ரயில் நிலையங்களில் இருந்தும் சரக்குகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
இந்த ரயில் மூலம் மதுரை கோட்டத்திற்கு ரூ. 2.4 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த புதிய பார்சல் ரயில் தொடக்க விழாவில் கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், இளனி மணிகண்டன், மார்த்தாண்டன், மாரிமுத்து மற்றும் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் - ரயில்வே துறைக்கு தயாநிதி மாறன் கோரிக்கை!