இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், 'கூல் கேப்டன்' என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியது. திரைபிரபலங்கள் பலரும் தோனியின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், மதுரையில் திரையுலகின் நாட் அவுட் நாயகனே என ரஜினிக்கு அவரது ரசிகர்கள் சுவரொட்டி அடித்து அமர்களப்படுத்தியுள்ளனர். அந்தச் சுவரொட்டியில் இந்திய கிரிக்கெட் அணியினர், மைதானத்திலிருந்து நடந்து வருகின்ற பின்னணியில் ரஜினி கிரிக்கெட் மட்டையோடு போஸ் கொடுக்கிறார்.
மேன் ஆஃப் தி சீரிஸ், மேன் ஆஃதி மேட்ச் என்ற வாசகங்களும் அந்தச் சுவரொட்டியில் அச்சிட்டுள்ளனர். 1975ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமான ரஜினி 2020 வரை கதாநாயகனாக வலம் வருவதைக் கொண்டாடும் விதமாக இந்தச் சுவரொட்டியை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். மதுரைக்கு இதுபோன்ற சுவரொட்டிகள் ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை தலைநகர் கோரிக்கை; மக்களின் குரலா? வாக்கு பெறும் முயற்சியா!