ETV Bharat / state

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம்! - போக்குவரத்து

மதுரை: சோழவந்தான் - வாடிப்பட்டி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பது மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

cholvanthaan-railway-bridge-work-is-affecting-people
author img

By

Published : Nov 22, 2019, 2:53 AM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் - வாடிப்பட்டி செல்லும் சாலையில் மிகவும் அதிகமான போக்குவரத்து உள்ள நிலையில், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அலுவலர்களின் அலட்சியப் போக்கால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஊர்பொதுமக்கள் பலமுறை கோரிக்கைவிடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி பாலத்தில் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிகாரர்களின் கூடாரமாக மாறிவரும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம்

இதுகுறித்து சோழவந்தான் பகுதி வைகை நகர் வீட்டுவசதி சங்கத் தலைவர் எம்.கே.சுப்பையா பேசுகையில், பலமுறைக் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. பேரூராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்.எல்.ஏ. விடம் முறையிட்ட போது தற்காலிக சாலை அமைத்து கொடுத்தார். ஆனால் அந்த சாலை இப்போது பெய்த மழையால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. எனவே இதன் வழியாக மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக மேம்பாலத்தை திறக்க உதவு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரம்: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது!

Intro:மதுரை, சோழவந்தானில் கட்டி முடித்து 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத நிலையில் குடிகாரர்களின் கூடாரமாக மாறிய ரயில்வே மேம்பாலம்... பொதுமக்கள் அவதி...Body:மதுரை, சோழவந்தானில் கட்டி முடித்து 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத நிலையில் குடிகாரர்களின் கூடாரமாக மாறிய ரயில்வே மேம்பாலம்... பொதுமக்கள் அவதி...

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி செல்லும் சாலையில் மிகவும் அதிகமான போக்குவரத்து உள்ள நிலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது... இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்... கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் அதன் வழியாக ஆயிரகனக்கானோர் வந்து செல்கின்றனர்... அடிக்கடி ரயில் கடக்கும் பகுதி என்பதால் போக்குவரத்து கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டு வருகின்றது... பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சிறுவர்கள் அதன் வழியே நடந்து செல்லும் போது சேரும், சகத்தியுமாக இருக்கும் பள்ளத்தின் பக்கவாட்டில் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்... அரசு பேருந்துகள், லாரிகள், கனரக வாகனகங்கள், டூவீலர், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலர் அவ்வழியே செல்லும் இந்த சூழ்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் இன்னும் திரக்கப்படாமலே இருப்பது பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.... பலமுறை ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.. இரவு நேரங்களில் மின் விளக்கு கூட இல்லாமல் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் நடக்க கூட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்... அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பாலத்தில் மது அருந்துவது உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்... இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இரவு நேரங்களில் இந்த வழியில் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்கின்றனர்... சோழவந்தான் பகுதி வைகை நகர் வீட்டு வசதி சங்க தலைவர் எம்.கே.சுப்பையா கூறும் போது பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை பேரூராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, எம்.எல்.ஏ விடம் முறையிட்ட போது தற்காலிக சாலை அமைத்து கொடுத்தார்.. ஆனால் அந்த சாலை இப்போது பெய்த மழையால் குண்டும் குழியும் ஆகி போனது எனவே இதன் வழியாக மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக மேம்பாலத்தை கட்டி முடித்து திறக்க உதவுமாறு அவர் கேட்டு கொண்டார்.... சோழவந்தானை சேர்ந்த வேணுகோபால் என்பவர் கூறும் போது பாலம் கட்ட எனது சொந்த வீடு மற்றும் கடைகளை அரசு கேட்டவுடன் கொடுத்து விட்டோம் என்றும் இப்போது வரை பாலம் வேலை முடியவில்லை எனவும் எங்களது வால்வாதாரணமான கடையும் போய்விட்டது என்றும் வீடு இடிக்கப்பட்டதுக்கு பணம் தருகிறோம் என்று அரசு கூறி6 இப்போது வரை பணம் தரவில்லை என்றும் அந்த வீட்டில் நாங்கள் குடியிருக்க கூட முடியாமல் சிரமப்படுகிறோம் எனவும் எங்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அரசு கொடுத்த வீடு இடித்ததற்கான ஆவணங்களையும் எடுத்து காட்டினார்...

சோழவந்தான் பகுதி பொதுமக்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கும் இந்த பாலம் திறக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.