தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் இரண்டாம் கட்டமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு வழங்கும் நிகழ்ச்சியினை திருமங்கலம் தொகுதி செக்கானூரணியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்து விவசாயிகளின் பாதுகாவலராக திகழ்கிறார். 29 மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் பேரில் 5 லட்சம் பேரை தேர்ந்தெடுத்து அதில் திருமங்கலம் தொகுதியில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் கட்டமாக கோதுமை மாவு வழங்கும் நிகழ்ச்சியை இன்று திருமங்கலம் கள்ளிக்குடி கல்லுப்பட்டி பகுதிகளில் தொடங்கி வைக்கப்பட உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மூன்று மதத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் கே. பாண்டியராஜன்