ETV Bharat / state

துப்புரவு பணியில் இருந்து குறிப்பிட்ட சாதி மக்கள் வெளியேற வேண்டும்- திரைப்பட இயக்குநர் அமீர்

மலம் அள்ளவும், துப்புரவு செய்யவும் மட்டுமே கட்டமைக்கப்பட்ட சாதிக் கொடுமையிலிருந்தும், ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற வேண்டும் எனவும், அப்போதுதான் உண்மையான விடுதலை என்பது சாத்தியம் எனவும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் அமீர் மதுரையில் நடந்த மாநாட்டில் பேசியுள்ளார்.

Certain caste people should quit cleaning work says Film director Ameer
துப்புரவு பணியில் இருந்து குறிப்பிட்ட சாதி மக்கள் வெளியேற வேண்டும்- திரைப்பட இயக்குனர் அமீர்
author img

By

Published : Feb 21, 2021, 11:00 PM IST

மதுரை: மதுரையில் கிராம ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உரிமை மீட்பு மாநாடு, மதுரை கே.கே. நகரிலுள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திரைப்பட இயக்குநர் அமீர் பேசினார். மாநாட்டில் அவர் பேசியதாவது; இந்த மாநாடை சுயமரியாதை மீட்பு மாநாடாகவே நான் பார்க்கிறேன். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒற்றுமையான இந்த மாநாட்டை மிகவும் வியந்து பாராட்டியிருப்பார்.

உலகத்தில் எத்தனையோ தொழில்கள் உள்ளன. ஆனால் தாங்கள் செய்கின்ற தொழிலை சொல்வதற்குக் கூச்சப்படுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள். காரணம் அந்தத் தொழிலின் இழிவு. டிஜிட்டல் இந்தியாவில் மாட்டின் காம்பிலிருந்து பால் கறப்பதற்குக் கூட இயந்திரம் கண்டுபிடித்துவிட்டான். சப்பாத்தி பிசைய, தோசை மாவு ஊற்றுவதற்கெல்லாம் கருவி கண்டுபிடித்தாயிற்று. ஆனால், கையால் மலம் அள்ளுவதற்கு மட்டும் இதுவரை மாற்று கண்டுபிடிக்கவில்லை. காரணம் சாதியக் கட்டமைப்பை அவ்வாறே வைத்திருப்பதுதான் இவர்களின் நோக்கம் என்றார்.

இயக்குநர் அமீர் பேச்சு

இந்து மதத்தின் அடிப்படை மனுதர்மம்

ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனர் ஜக்கையன் நிகழ்வில் பேசுகையில், "துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படுகின்ற அவமானங்கள் சொல்லிமாளாதது. இந்தத்தொழிலுடன் சாதியும் பின்னிப் பிணைந்திருக்கின்ற காரணத்தாலேயே சமூக ஒடுக்குமுறைக்கு இத்தொழில்புரிபவர்கள் ஆளாக நேரிடுகிறது. கோயில் கருவறையில் மணியடிக்கக்கூடிய பிராமணரைத் தாண்டி, பிற சாதியர் உள்ளே நுழைய முடிவதில்லை. ஆனால், கழிவறையில் பணியாற்றுவதற்கு பிற சாதியர் யாரும் முன்வருவதில்லை. இதுதான் இந்த சாதியக் கட்டமைப்பின் வெற்றி. இந்த வேலையை இந்த சாதிதான் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கின்ற மனுதர்மம்தான், இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளது" என்றார்.

மாநாட்டின் நோக்கம்

இந்த மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருட்தந்தை பிளோமின் சகாயராஜ் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், 'கிராம ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் பல உள்ளன. நியாயமான ஊதியமின்மை, பணி ஒழுங்குபடுத்தப்படாதது, நிரந்தப் பணியின்மை, பணி முதிர்ச்சிக்கேற்ற ஊதியமில்லாதது, பணப் பலன்கள் இல்லாதது, அரசு ஊழியர்களாகக் கருதப்படாதது போன்ற பல்வேறு சிக்கல்களுடன்தான் இவர்களது பணி உள்ளது.

யர் நீதிமன்ற வழக்கறிஞர் அருட்தந்தை பிளோமின் சகாயராஜ்

ஆண்டாண்டு காலமாக எந்தவித மேம்பாடுமின்றி இவர்களது வாழ்க்கை கழிந்துவிடும் சூழல் உள்ளது. ஆகையால், இவர்களது பணி குறித்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பான கவனம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இம்மாநாட்டில் 11 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. இரண்டாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரப்படுத்தி, ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றுகிற கடைநிலை அரசுப் பணியாளராக அறிவிக்க வேண்டும். பணி செய்வதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். அவர்களுக்குரிய பணிப் பலன்கள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும். இது, துப்புரவுப் பணியாளர்களின் பணியோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற சமூக அவலத்தை போக்குகின்ற மாநாடாகும்.

இம்மாநாட்டிற்கு வந்திருக்கின்ற தொழிலாளர்கள்தான் இந்த இழிதொழிலின் கடைசித் தலைமுறையினர். அவர்களின் தலைமுறையினர் ஒருபோதும் இந்தத் தொழிலை செய்யமாட்டார்கள் என்ற உறுதி எடுத்திருக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பாதாள சாக்கடையை தூய்மை செய்ய ரோபோக்கள் வேண்டும் - தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.