தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின் அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பென்னிக்ஸ் ஜூன் 22ஆம் தேதி இரவும் ஜெயராஜ் ஜூன் 23ஆம் தேதி அதிகாலையும் உயிரிழந்தனர். அதுதொடர்பாக கொலை வழக்குப் பதியப்பட்டது.
அதைத்தொடர்ந்து வழக்கை சிபிசிஐடி விசாரித்துவந்த நிலையில் தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்க டெல்லி சிபிஐ அலுவலகத்திலிருந்து ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார், சுஷில் குமார் வர்மா, அஜய்குமார், சச்சின், பூனம் குமார் ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர் இன்று மதுரை வந்தடைந்தனர்.
மதுரை விமான நிலையம் வந்த அவர்கள் அங்கிருந்து 3 கார்களில் துத்துக்குடிக்கு புறப்பட்டனர். அங்கு சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து கோப்புகள், தடயங்களை கைப்பற்றி முதல்கட்ட விசாரணையை தொடங்குவார்கள்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்'