தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேவுள்ள ஜக்கம்பட்டியில் பத்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டுவருகின்றன. சாயப்பட்டறைகளிலிருந்து வெளிவரும் கழிவு நீரானது ஆண்டிப்பட்டி பிரதான கால்வாயில் கலக்கிறது.
இதனால், அப்பகுதி முழுவதும் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பலமுறை உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஆண்டிப்பட்டி தாலுகா ஜக்கம்பட்டியில் செயல்படும் சாயப்பட்டறைகளை உடனடியாக மூடுவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வில் இன்று (ஜன.05) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!