ETV Bharat / state

நரிக்குறவர் பெயரில் உள்ள 'குறவர்' என்பதை நீக்கக் கோரிய வழக்கு - நீதிமன்றம் அதிரடி ஆணை! - MBC

எம்பிசி(MBC) பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள ‘குறவர்’ என்பதை நீக்கம் செய்யக் கோரிய வழக்கு குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நரிக்'குறவர்' என்ற பெயரில் உள்ள 'குறவர்' என்பதை நீக்க கோரிய வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Dec 3, 2022, 5:29 PM IST

மதுரை: விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் (எ) முத்துமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். இவர்கள் தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள்ளனர்.

மலைப்பகுதியில் இருந்து தற்போது சமதள பரப்பில் வசிக்கின்றனர். மலைக்குறவன், குறவன் உள்ளிட்ட பெயர்களும் அவர்களுக்கு உண்டு. கடந்த 1951ஆம் ஆண்டில் எம்பிசி பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

ஆனால் நரிக்குறவர்களின் சமயம், பழக்க வழக்கம், திருமண முறைகள் வேறுபாடு கொண்டது. இவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல.

ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களது கலாச்சார முறை வேறுபட்டது. அவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை வழங்குவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபமும் இல்லை. எனவே எங்களது ‘குறவர்’ என்னும் பெயரை எம்பிசி பட்டியலில் உள்ள நரிக்’குறவர்’ என்ற பெயரில் இருந்து நீக்க வேண்டும்.

அவர்களை நரிக்காரரர், குருவிக்காரர், வாக்கிரிவாலா, நக்கலே என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். குறவர், குறவன் என்பது எங்களின் பெயர். இதனால் எங்களது கல்வி, வேலைவாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் என்பதை நீக்கம் செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிச.3) விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது. மேலும் வழக்கின் விசாரணை அதுவரை ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாது - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.