ETV Bharat / state

அமைச்சர்களின் சராசரி வயது அதிகம் - உதயநிதி தான் பாலம் என்கிறார் பி.டி.ஆர். - Palanivel Thiagarajan

மக்களின் சராசரி வயதைக் காட்டிலும் திமுக அமைச்சர்களின் சராசரி வயது அதிகமாக இருப்பதால், உதயநிதி ஸ்டாலின் பாலமாக இருப்பார் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Dec 31, 2022, 12:35 PM IST

Updated : Dec 31, 2022, 1:18 PM IST

உதயநிதி தான் பாலம் என்கிறார் பி.டி.ஆர்.

மதுரை: கோ.புதூர் பகுதியில் மாநகர் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் பிடிஆர், “சென்னையில் இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பான தகவல்களை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். கடந்த ஆண்டு தமிழகம் நிதியில் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்ததோ, இந்த ஆண்டு அதனை விட சாதனை முன்னேற்றம் அடையும்.

பேராசியர் அன்பழகன் எனக்கு குழப்பமான சூழலில் ஓர் வழிகாட்டியாக இருந்தவர். நீ எப்போது அரசியலுக்கு வந்தாலும் பிடிஆர் மகன் என்றுதான் சொல்வார்கள் எனவே அரசியலுக்கு வா என என்னை அழைத்தார்.

மக்களின் சராசரி வயது 35 ஆக உள்ளது. திமுகவினர் வயது அதைவிட அதிகம், மேலும் மூத்த அமைச்சர்களின் வயது 70 ஆக உள்ளது. இந்த வயது இடைவெளியை குறைப்பதற்காகவும் இளைஞர்களை ஈர்க்கவும் இளைஞரணி செயலாளர் இந்த பொறுப்புக்கு வருவது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது.

அதற்காக உதயநிதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் அசையும் சொத்தாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவர் என்னிடம் நெருங்கி பழகக் கூடியவர். அவரின் பணியில் தேவையான முன்னேற்றங்களுக்கு என்னால் முடிந்தவற்றை அண்ணன் என்ற முறையில் செய்வேன்.

எந்த மதமாக இருந்தாலும் எல்லா மக்களுடன், பாசம் மரியாதை செலுத்த வேண்டும் என அண்ணா சொன்னார். அதை நான் பின்பற்றுபவன். பதவி வரும் போகும், மனிதனுடைய அடையாளம், பெருந்தன்மை, அன்பு ,பாசம் அது என்றும் மாறாது. இன்று எந்தனையோ பதவி வந்தாலும் பண்பாளரின் மகன் என்பதுதான் என் முக்கிய அடையாளம். அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது எடுக்கவும் முடியாது” என்றார்.

இதையும் படிங்க: வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது

Last Updated : Dec 31, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.