ETV Bharat / state

இந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு - அர்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு நடக்கிறது என்று யாரேனும் நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசளிக்கப்படும் என்று அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 5, 2022, 10:58 PM IST

மதுரை: காளவாசல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், 'ராம ராஜ்ய ரதயாத்திரை' தமிழ்நாடு வருவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தேவர் ஜெயந்தி அன்று மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரியில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும். தேவர் குருபூஜையை அரசியல் கட்சியினர் சாதிய விழாவாக நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் அமைதி ஏன்?: கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போதே, இதில் ஐஎஸ்ஐஎஸ்ஐ அமைப்பு ஈடுபட்டிருக்கும் என்று கணித்தோம். தற்போது போலீசார் மற்றும் என்ஐஏ விசாரணையில் அது தெரிய வருகிறது. குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றளவும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார். ஜமாத்தார்கள் கோவில்களுக்கு வந்து மத நல்லிணக்கத்தை பேணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. அதேபோல், கோட்டை ஈஸ்வரன் கோயில் ராஜா கோபுர திருப்பணி நடைபெறாமல் இருந்து வருகிறது. அதனை விரைந்து நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பா! நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு - அர்ஜுன் சம்பத்

ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் நடுநிலை தேவை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு மீண்டும் தடை விதிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் மிசாவை எதிர்த்து திமுகவுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு இணைந்து செயலாற்றி தேசபக்தியை நிரூபித்து உள்ளது. எனவே, முதலமைச்சர் நடுநிலையாக செயல்பட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு விசிக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

இந்து திணிப்பை நிரூபித்தால், ரூ.10 லட்சம்!: தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இந்து திணிப்பு எங்கு உள்ளது என்று நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு தரப்படும். சென்னையில் மழை வெள்ளம், நிவாரணம் மற்றும் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். 2 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ள மீட்பு பணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மக்கள் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

சர்வதிகார ஆட்சிக்கு தக்க பாடம்: ஆரஞ்சு பாக்கெட் பாலுக்கு விலையை உயர்த்துவது என்று பால் விலையை மறைமுகமாக உயர்த்தி உள்ளனர். குறைக்கூற வரும் பொதுமக்களை அவமரியாதை செய்து கொண்டே இருக்கிறார். அமைச்சர் பொன்முடி பெண்களை அவதூறாக பேசியவர்களுக்கு எதிராக அண்ணாமலை போராட்டம் நடத்தியதால் கைது, சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்தும் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஆளுநர் தமிழ்நாட்டில் நடைபெறுவதை எடுத்துரைக்கிறார். பிரிவினைவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

என்ஐஏ விசாரணைக்கும் தயார்: கடந்தாண்டு ராம ரதயாத்திரைக்கு, திராவிட இயக்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த முறையும் தடுக்க முயற்சி செய்வார்கள். இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடுநிலை தன்மையுடன் செயல்பட வேண்டும். அண்ணாமலை மட்டும் குண்டு வெடிப்பு பற்றி பேசாமல் இருந்திருந்தால் சம்பவத்தை முற்றிலும் மூடி மறைத்து இருப்பார்கள். அண்ணாமலையை என்ஐஏ தாராளமாக விசாரிக்ககட்டும், விசாரணையின்போது அவரிடம் இருக்கும் ஆவணங்களை ஒப்படைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’அண்ணாமலைக்கு விளம்பர மேனியா என்னும் நோய் உள்ளது...!’ - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.