ETV Bharat / state

அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த மாணவர்கள் - மதுரை அரிட்டாபட்டி ஓவிய கண்காட்சி

மதுரை: தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அரிட்டாபட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அக்கிராமத்தில் கண்ட காட்சிகளை அழகுமிகு ஓவியங்களாய் வரைந்து அதை பொதுமக்களின் பார்வைக்கு கண்காட்சியாக அமைத்துள்ளனர்.

அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த ஆர்க்கிடெக்சர் மாணவர்கள்
அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த ஆர்க்கிடெக்சர் மாணவர்கள்
author img

By

Published : Dec 21, 2019, 8:34 PM IST

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் காஞ்சிபுரத்திலுள்ள மிடாஸ் எனும் தனியார் கட்டடக்கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஒருவார காலமாக தங்கியிருந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அம்மாணவர்கள், வாழ்வியல், வேளாண்மை, நீர்ப்பாசனம், தெருக்களின் கட்டமைப்பு, கால்நடைகள், பறவைகள், இயற்கை அமைவு, பண்பாடு, என பல்வேறு கூறுகளில் அக்கிராமத்தின் தொன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும் அவை அனைத்தையும் மிகத் தத்ரூபமாக ஓவியங்களாகவும், மாதிரியாகவும் வடிவமைப்புச் செய்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று கண்காட்சியாக அமைத்திருந்தனர். இன்றும் நாளையும் பொதுமக்களின் பார்வைக்காக இக்கண்காட்சி இலவசமாக நடைபெறுகிறது.

அரிட்டாபட்டி கிராமமே அழகு ஓவியமாய் - அசத்திய மாணவர்கள்

இது குறித்து கண்காட்சியைத் திறந்து வைத்த அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் கூறுகையில், ' கிராமமோ, நகரமோ உருவாவதற்கு நீர்நிலைகள் மிகவும் அவசியமானவை. அந்த வகையில் அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள இயற்கை சூழல் நகரமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்குரிய முறையான ஆய்வினை மேற்கொண்டு ஆவணப்படுத்தி மக்கள் முன்பாக இந்த மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியுள்ளனர்' என்றார்.

காப்பாட்சியர் மருதுபாண்டியன் மற்றும் மாணவி சசிரேகா பேட்டி

ஆய்வு மாணவி சசிரேகா கூறுகையில், 'அரிட்டாபட்டி கிராமத்தை எங்களது கல்விக்கான ஆய்வுக்களமாக மட்டுமே பார்க்காமல், அங்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி மையம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான முயற்சிகளை எங்களது கல்லூரியின் மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அங்கு உருவாக்கப்படவுள்ள மையம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்களே திட்டமிட்டு வடிவமைப்புச் செய்யவிருக்கிறோம்' என்றார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்குப் பிறகு தமிழர்களை ஒருங்கிணைத்த சொல் கீழடி!

Intro:அரிட்டாபட்டி கிராமத்தை அழகு ஓவியங்களில் பிரதிபலித்த ஆர்க்கிடெக்சர் மாணவர்கள்

கட்டிடக்கலை பயின்ற மாணவ, மாணவியர் அரிட்டாபட்டி கிராமத்தை தங்களது அழகுமிகு ஓவியங்களால் பிரதிபலித்ததுடன், அதனைக் கண்காட்சி அமைத்து பொதுமக்களை ஈர்த்துள்ளனர்.
Body:அரிட்டாபட்டி கிராமத்தை அழகு ஓவியங்களில் பிரதிபலித்த ஆர்க்கிடெக்சர் மாணவர்கள்

கட்டிடக்கலை பயின்ற மாணவ, மாணவியர் அரிட்டாபட்டி கிராமத்தை தங்களது அழகுமிகு ஓவியங்களால் பிரதிபலித்ததுடன், அதனைக் கண்காட்சி அமைத்து பொதுமக்களை ஈர்த்துள்ளனர்.

காஞ்சிபுரத்திலுள்ள மிடாஸ் எனும் தனியார் கட்டிடக்கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அரிட்டாபட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரம் அங்கே தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த கிராமத்தின் வாழ்வியல், வேளாண்மை, நீர்ப்பாசனம், வீடுகள், தெருக்களின் கட்டமைப்பு, கால்நடைகள், பறவைகள், இயற்கை அமைவு, பண்பாடு, நாகரிகம் என பல்வேறு கூறுகளில் அக்கிராமத்தின் தொன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அவை அனைத்தையும் மிகத் தத்ரூபமாக ஓவியங்களாகவும், கிராமத்தின் மாதிரியாகவும் வடிவமைப்புச் செய்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று கண்காட்சியாக அமைத்திருந்தனர். இன்றும் நாளையும் பொதுமக்களின் பார்வைக்காக இக்கண்காட்சி இலவசமாக நடைபெறுகிறது.

இது குறித்து கண்காட்சியைத் திறந்து வைத்த அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் கூறுகையில், 'காஞ்சிபுத்தைச் சேர்ந்த மிடாஸ் கல்லூரியும் அரசு அருங்காட்சியகமும் இணைந்து இந்தக் கண்காட்சியை அமைத்துள்ளோம். அரிட்டாபட்டி கிராம உருவாக்கம், அதற்கான காரணிகள், வாழ்வாதாரம் ஆகியவை குறித்தும் விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கிராமமோ, நகரமோ உருவாவதற்கு நீர்நிலைகள் மிகவும் அவசியமானவை. அந்த வகையில் அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள இயற்கை சூழல் நகரமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்குரிய முறையான ஆய்வினை மேற்கொண்டு ஆவணப்படுத்தி மக்கள் முன்பாக இந்த மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தியுள்ளனர்' என்றார்.

மாணவி யோகேஸ்வரி கூறுகையில், 'நாங்கள் மிடாஸில் 2-ஆம் ஆண்டு பயில்கிறோம். இது கள ஆய்வின் வழியான கல்வியாகும். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக அரிட்டாபட்டி கிராமத்தில் மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடுதான் இந்தக் கண்காட்சி' என்றார்.

மற்றொரு மாணவி சசிரேகா கூறுகையில், 'அரிட்டாபட்டி கிராமத்தை எங்களது கல்விக்கான ஆய்வுக்களமாக மட்டுமே பார்க்காமல், அங்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி மையம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான முயற்சிகளை எங்களது கல்லூரியின் மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அங்கு உருவாக்கப்படவுள்ள மையம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்களே திட்டமிட்டு வடிவமைப்புச் செய்யவிருக்கிறோம்' என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.