ETV Bharat / state

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் மீண்டும் வரி ஏய்ப்பு புகார் - Complaint that receipts are issued without GST tax

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரியின் சகோதரருக்கு சொந்தமான உணவகங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது.

Etv Bharatநடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் மீண்டும் வரி ஏய்ப்பு புகார்

author img

By

Published : Nov 10, 2022, 2:25 PM IST

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரியின் சகோதரருக்கு சொந்தமான உணவகங்கள் இயங்கி வருகின்றன. மதுரை மாநகர் செல்லூர் ஒத்தக்கடை, ஊமச்சிகுளம்,ஆத்திகுளம் கடச்சனேந்தல் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் GST வரி இன்றி ரசீதுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மன் உணவகங்களில் GST வரி செலுத்தவில்லை என அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் GST இன்றி ரசீதுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

GST வரி இன்றி ரசீதுகள்
GST வரி இன்றி ரசீதுகள்

மேலும் தெப்பக்குளம், ஆத்திகுளம் பகுதியில் உள்ள உணவகங்களில் மட்டும் உணவு வகைகளுக்கு GST வரியுடன் ரசீதுகள் வழங்கப்படும் நிலையில் மற்ற கிளைகளில் வழங்கப்படவில்லை எனவும், நாள்தோறும் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க:நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டலில் வணிகவரித்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.