ETV Bharat / state

திருப்பரங்குன்றம் டிடிவி தினகரனின் கோட்டை: அமமுக வேட்பாளர் சிறப்பு பேட்டி!

மதுரை: திருப்பரங்குன்றம் டிடிவி தினகரனின் கோட்டை என அத்தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரன் கூறியுள்ளார்.

ammk
author img

By

Published : Apr 30, 2019, 11:30 AM IST

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மகேந்திரன், ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதி எப்போதுமே டிடிவி தினகரனின் கோட்டையாகத் திகழ்கிறது" என்றார்.

அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்து வந்ததால் அவர்களின் வாக்குகள் பிரிந்துவிடும் நாங்கள் எளிதாக தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று டாக்டர்.சரவணன் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அது அவருடைய அரசியல் கணக்காக இருக்கலாம், ஆனால் நாங்கள் பிரிந்து வந்தது என்பது உண்மைதான் இருந்தாலும் டிடிவி தினகரனின் கொள்கையில் மக்கள், இளைஞர்கள், உள்ளிட்டோர் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது என்பது ஆர்.கே நகர் தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

அமமுக வேட்பாளர் மகேந்திரன் சிறப்பு பேட்டி!

மேலும் அவர் பேசுகையில், ”இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என்ற வகையில் சென்னை, மதுரையில் இருக்கின்ற தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு முகாம்கள் அமைத்து அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு முனைப்போடு செயல்படுவேன். திருப்பரங்குன்றம் தேர்தலில் 63 பேராக இருந்தாலும் 630 பேராக இருந்தாலும் அமமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
30.04.2019

*SPECIAL BYTE*

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் 63 பேராக இருந்தாலும் 630 பேராக இருந்தாலும் அமமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதி*

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மகேந்திரன் அவர்கள் etv bharat செய்திகளுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் என்னை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக மக்கள் செல்வர், ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரனின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

எங்களின் வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது, ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதி எப்போதுமே எங்கள் மக்கள் செல்வன் டிடிவி தினகரனின் கோட்டையாக திகழ்கிறது அதனால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது என கூறினார்.

அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்து வந்ததால் அவர்களின் ஓட்டு பிரிந்து விடும் நாங்கள் எளிதாக தேடுதலில் வெற்றி பெற்று விடுவோம் என்று டாக்டர்.சரவணன் கூறியது பற்றிய கேள்விக்கு ?

அவருடைய அரசியல் கணக்காக இருக்கலாம் ஆனால் நாங்கள் பிரிந்து வந்தது என்பது உண்மை தான் இருந்தாலும் எங்கள் மக்கள் செல்வன் டிடிவி அவர்களின் கொள்கையில் மக்கள், இளைஞர்கள், பொதுநலவாதிகள் ஆகியோர் ஈர்க்கப்பட்டு வந்துள்ளனர் அதனால் அவர்களின் ஆதரவு எங்களுக்குத் தான் இருக்கிறது என்பது ஆர்கேநகர் தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இளம் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு எதையேனும் பிரத்தியேக திட்டங்கள் எதுவும் உள்ளதா என்ற கேள்விக்கு ?

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என்ற வகையில் சென்னை, மதுரையில் இருக்கின்ற தனியார் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு முகாம்கள் அமைத்து அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு முனைப்போடு செயல்படுவேன் என்று உத்தரவாதம் கூறுகின்றேன் என்றார்.

திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு ?

63 பேராக இருந்தாலும் 630 பேராக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி வாய்ப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு அதைப்பற்றி எந்த ஒரு அச்சமும் இல்லை எனக் கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_02_30_TIRUPPARANKUNDRAM_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.