ETV Bharat / state

போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம் - நீதிபதி புகழேந்தி - போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றம்

போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களில் அமைக்காலம் என்று உயர் நீதி மன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை

author img

By

Published : Jan 29, 2023, 7:50 AM IST

மதுரை: கஞ்சா வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை மருத்துவ காரணம் தவிர்த்து உற்பத்தி செய்ய, தயாரிக்க, விற்பனை மற்றும் உபயோகப்படுத்த தடை உள்ளது.

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகளவில் அபராதமும், தண்டனையும் விடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டும், அதிகபட்சம் 20 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக சில வழக்குகளில் மரண தண்டனை கூட வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் வணிக ரீதியான அளவில் கைதானோர் ஜாமீன் பெறும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

அதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன. 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்பாட்டை தடுத்து சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடும் வகையில், போதைப் பொருள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசின் சார்பில் உரிய நடவடிக்கையும் தேவையான சுற்றறிக்கையும் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் வழக்குகளில் உடனடியாக வழக்குப் பதிவதோடு மட்டுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்து பறிமுதல் பொருட்களை பாதுகாப்பது உள்ளிட்டவை தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் பொருட்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அறைகள் சென்னை, திருச்சி, மதுரை, தேனி மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு பின்பற்றப்படுகிறது. சென்னையில் போதைப் பொருள் ஒழிப்பு குழுவும் டிஐஜிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன. 10 நாட்களுக்குள் ஆய்வு முடிவுகள் கிடைத்திடும் வகையில் தடயவியல் ஆய்வகங்களில் 2 ஆய்வு நுட்பதாரர்கள் மற்றும் அறிவியல் அலுவலர் இருப்பதை உறுதி செய்யவும் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்ட போதைப் பொருள் சிறப்பு நீதிமன்ற வரம்பிற்குள் உள்ளது. மதுரையை கடந்து தான் போலீசார் புதுக்கோட்டை செல்ல வேண்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அந்தந்த பகுதிக்குள் 100 கிமீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்குமான இடைவேளை குறைவாக இருக்க வேண்டும் அப்போதுதான் போலீசாரால் வழக்கை சரியாக தொடர முடியும்.

போதைப் பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்தலாம். இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளது. டிஐஜியின் சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. மனுதாரர்கள் ஏற்களவே விசாரணை நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றுள்ளதால் எந்த மேல் உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரித்துள்ளார்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜனவரி 29ஆம் தேதிக்கான ராசிபலன்

போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கலாம் - நீதிபதி புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.