மதுரை: பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் எழுப்பி வரும் நடிகர் சித்தார்த், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ’மதுரை விமான நிலையம் வந்த தனது வயதான பெற்றோரின் உடமையை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்துள்ளனர்.
சோதனையின் போது பையில் இருந்த சில்லறைகளை வெளியே எடுக்கும்படி கூறியுள்ளனர். இதற்கு என் பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் தன்னுடைய வயதான பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும்’ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தி மொழி குறித்து அண்மை காலங்களில் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த்தின் இந்த பகிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் - திரௌபதி முர்மு